Thursday 31 March 2011

தடங்கல் தம்புசாமி

அன்பார்ந்த நேயர்களே வெகு  வருஷமாக ஒரு கதை எழுத வேண்டுமென்று அற்ப ஆசை .62 வது வயதில் அது சித்தித்தது.ஆனால் படிக்கபோவது  நீங்கள் .முதல் முயற்சி .கஷ்டமாக இருக்கும் எனக்கு இல்லை .உங்களுக்கு .சரி. கதைக்கு வருவோம் .கதையின் தலைப்பு
                                                                                                        தடங்கல்  தம்புசாமி !!
தடங்கல் தம்புசாமி தடுக்கிக்கொண்டே பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்று கொண்டிருந்தான் . மணி காலை  8  திங்கள் கிழைமை. கிளம்பும்போதே  அம்மா   "டேய்  ராவு காலம்டா  9  மணிக்கு சங்கு  ஊதின பிறகு போகலாம் "என்று தடங்கல் போட்டாள்.(அந்த ஊரிலே 9  மணிக்கு நகராட்சி  சங்கு ஊதுவாங்க ).ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தடங்கல் தம்புசாமிக்குஅந்த பெயர் அவனால் ஏற்பட்டது இல்லை .அவன் யாருக்கும் தடை போடமாட்டான். ஆனால்  அவனுக்கு தடங்கல் தடுக்கின இடமெல்லாம்  வரும் .அம்மா  சொல்கிறாளே  என்று சிறிது
தயங்கிய வன்  ,தண்ணீர்  சிறிது குடித்துவிட்டு  "ச்சு" கொட்டிவிட்டு மேலே  கிளம்பினான் .வாசலில் பக்கத்து வீட்டு மொட்டையன் "தம்பு  காக்கா எதிர் திசையிலே  போகுது ,பார்த்து போ " என்று அஸ்து கொட்டினான் .பல்லை கடித்துக்கொண்டு தம்பு மேலே நடந்து கொண்டிருந்தான் . பாதாள சாக்கடை போட  ரோடெல்லாம்  வெட்டி  கன்னா பின்னா வென்று  கற்களையும்  மண்ணையும்  போட்டிருந்தார்கள் .வேறு தடங்கலே வேண்டாம் இது போதும் என்று நினைத்து  பஸ்ஸுக்கு நேரமானதால்  ஓட்டமும்  நடனமுமாக  சென்றான் .
காலை 9  மணிக்கு  நேர்காணல் . இருந்து  இருந்து நூறில்  ஒரு interview  .இதற்க்கு  தடா  போட்டால் வாழ்க்கை தடால் .ஆகவே பிடரியில்  நினைவுகள்  உந்த பஸ்ஸை பிடிக்க விறைந்தான்.பஸ்ஸை பிடித்து  உள்ளே அப்பாடா என்று கூட்டத்தில் கால் வைக்க இடம் தேடி  கம்பியை  பிடித்து ஒருவாரு  நிற்க  முயன்றான் . அருகில் இருந்த பெரியவர் ஒருவர் "என்ன  interview  வா? என்று குசலம் விசாரித்து , ராகு
காலத்தில் என்னன்ன வேலைகள் செய்யகூடாது  தெரியுமோ என்று கதைக்க ஆரம்பித்தார் .தம்புசாமிக்கு  தலை தெறிக்க ஆரம்பித்தது .
கோபத்துடன் பெரியவரை பார்த்தான். ராகு தசை  ராகு புக்தி நடக்குது  எனக்கு .இந்த தம்புசாமியை   ராகு ஒன்றும் செய்யாது .பேசாம வாங்க என்று பெரியவரை ஒரு போடுபோட்டான் .  தம்புசாமின்னு கூபிடறதிர்கு பதிலா  வம்புசாமின்னு இவனை  கூப்பிடலாம் என்று பெரியவர்
முணுமுணுத்து கப்சிப்  என்றாகிவிட்டார் .ஒருவழியாக  மக்கள்  கூட்டத்தில்  நீச்சலடித்து  பஸ்ஸை  விட்டு  கீழே  இறங்கி  இன்டர்வியூ  நடக்கும்  இடத்தை  நோக்கி   நடக்கலானான் .அவன்  உள்ளே   போகும்போது  மணி  8 -45  .ஒரு ஈ ,காக்கா  இல்லை .தம்புவுக்கு  சந்தேகம்  வந்த்துவிட்டது .,தவறான இடத்துக்கு  வந்துவிட்டோமோ  அல்லது  தவறான தேதிக்கு  வந்துவிட்டோமோ  என்று திரும்பிவிட  நினைத்தபோது ,  கேபின்  உள்ளிருந்து   கோட்டு போட்ட ஒருவர் அவனை  உள்ளே  வருமாறு  சைகை  செய்தார். உள்ளே சென்றான். கை  குலுக்கினார். இன்டர்வியூ  ஆரம்பிக்கலாமா ? என்றார் . அவனுக்கு  அதிர்ச்சி !  பஸ்ஸில் அவன் திட்டிய அதே  பெரியவர் அவர். எப்படி எங்கே  இறங்கினார் .எப்படி டிரெஸ்
மாற்றி கொண்டார்  என்று  ஒன்றும்  புரியவில்லை தம்புசாமிக்கு .உதறல்  வேறு .பஸ்ஸில் அவரை
ஏடாகூடா மாக  பேசிவிட்டான் .அவன் நினைத்தவாறே  அவரும்  ராகு  காலத்தை  பற்றி  கேள்வி  ஆரம்பித்தார் . ராகுகாலம்  போலிருக்கு  யாரையும்  காணோமே நீ தைரியமா வந்திருக்கியே  என்று ஒரு ஷொட்டு  கொடுத்தார் .தம்புவும் ,ஆமாம்  சார்  ரொம்ப பேருக்கு தெரியாது , ராகு காலத்தை 4  பாகமா  பிரிச்சு , கடைசி 4  வது  பாகத்திலே  ஒரு  காரிய்ம் செஞ்சா  அது  சக்ஸஸ்  ஆகும்னு  படிச்சிருக்கேன் .இப்ப  பாருங்க  நான்  தைரியமா  வந்தது  போலவும் , வேலை  எனக்கே  எனவும் ஆகியிருக்கு .இதுதான் சார்  விதியை  மதியால்  வெல்லனும் கிறது .,என்றான் . இன்டர்வியூ பெரியவர்  முகத்தில்  ஈயாடவில்லை .ஆர்டரை  கொடுத்துவிட்டு  வாழ்த்திவிட்டு  விடை  கொடுத்தார் .

                   சார் !   எழுந்திருங்க    கதை  முடிஞ்சிருச்சு .நான்  தடங்கல் இல்லாம வூட்டுக்கு  போகணும் !!!!
உங்கள்  அபிமான எழுத்தாளர் ,
ராபாசுமணியன்